(நபியே! அவர்களிடம்) 'வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்¢ (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்¢ அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்¢ அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்¢ (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: 'நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள். இம்ரானின் சந்ததிகள் (3:64)

Monday, March 5, 2007

தடைகள் (Breaks)

தடைகள் (பிரேக்)

ஒரு இலக்கை சென்றடைவதற்கு பயணிக்கும் ஒரு வண்டி 120 கி.மீ. வேகத்தில் செல்லும் போது தீடிரென்று எதிர்ப்படும் வேகத்தடையைப் பார்த்து நீதானமிழந்து திக்குமுக்காடி போகிறது. அதை சமாளித்து தப்பி பிழைப்போரும் உண்டு. அத்துடன் தங்கள் ஓட்டத்தை முடித்துக் கொள்வோரும் உண்டு.

மனித வாழ்வையும் ஒரு வண்டிக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். எப்படி ஒரு வண்டியை ஓட்டும் போது வேகத்தடைகளும், அதை தொடர்ந்து பிரேக்குகளும் எவ்வளவு அவசியமோ அதுபோல மனித வாழ்விலும் பிரச்சனைகளும், துன்பங்களும் ஏற்படும் போது அதை தொடர்ந்து சில உடல் சோர்வுகளும், மன உளைச்சல்களும் ஏற்படத் தான் செய்யும். இதிலிருந்து எந்த மனிதனுக்கும் விதிவிலக்கு கிடையாது. ஒரு இலட்சியத்தை நோக்கி பயணிக்கும் மனிதன் எதிர்ப்படும் இன்னல்களை கண்டு அத்துடன் தன் பயணத்தை முடித்துக் கொள்வானேயானால் அவனால் இலக்கை ஒரு போதும் அடைய முடியாது.
அதே நேரத்தில் இலக்கை அடைய வேண்டுமே என்பதற்காக அதிவேகமான கட்டுபாடு இல்லாத பயணத்தினால் எதிர்பாராத பிரச்சனைகளில் சிக்கி அத்துடன் அவன் பயணம் தடைப் பட்டுவிடுகிறது. வாழ்வினில் இவ்வாறு பயணம் செய்யும் போது இலட்சியவாதி கவனமாக தன் அடிகளை எடுத்து வைக்க வேண்டியுள்ளது.

இதனை தான் உமர் (ரலி) அவர்கள் விளக்கினார்கள். அவர்களிடம் கேட்கப்பட்டது. ''இவ்வுலகில் ஒரு முஸ்லிம் எவ்வாறு வாழ வேண்டும்"". அதற்கு அவர் ''கரடுமுரடான, முட்கள் நிறைந்த பாதையிலே எவ்வாறு எச்சரிக்கையுடன் ஒருவன் தன் காலடிகளை எடுத்து வைப்பானோ, அவ்வாறு ஒரு முஸ்லிம் இவ்வுலகில் தன் வாழ்க்கை எச்சரிக்கையுடன் தொடர வேண்டும""; என்றார்கள்.

ஆக இவ்வாறு பயணிக்கும் ஒரு முஸ்லிம் தன் பயணத்தை மிக கவனமாக எடுத்து வைப்பதால் தடைகள் வரும்போது உடன் அவனால் சமாளிக்க முடிகிறது. ஆனால் ஒரு நிராகரிப்பாளளோ அல்லது பலகீனமான முஸ்லமோ தடைகள் ஏற்பட்டவுடன் அதற்குள் விழுந்து, சிக்கி கொண்டு அதிலிருந்து விடுபட முடியாமல் தத்தழித்து அவன் வாழ்வும் அத்துடன் முடிந்துவிடுகிறது.

சரி இன்றிலிருந்து நான் சீரான வேகத்துடன் தான் பயணம் செய்வேன் அதனால் எனக்கு பிரேக் உள்ள வண்டி தேவையில்லை என்றும் அடம் பிடிக்க வும் கூடாது. ஏனென்றால் நாம் அவ்வாறு சென்றாலும் எதிரில் வரக் கூடியவர்களாலோ அல்லது சிலநேரங்களில் நம்முடைய அலட்சியத்தினாலோ வண்டி தடுமாறலாம் அந்த நேரத்தில் கண்டிப்பாக பிரேக் அவசியப்படும்;.

இதை அல்லாஹ{வை யுடைய தூதர் (ஸல்) அவர்கள் அழகாக விளக்கினார்கள்.
"ஒரு முஃமீன் காற்றடித்தால் சாயும் ஒரு புல்லைப் போன்றவன். அது காற்றடித்தால் சிறிது வளைந்து பின் நிமிர்ந்து விடும். ஆனால் ஒரு நிராகரிப்பாளன் ஒரு மரத்திற்கு ஒப்பாவான். ஒரு பெரும் காற்று அதனை வேறோடு பெயர்த்துவிடுகிறது என்றார்கள்."

முஸ்லிமின் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளின் (பிரேக்கின்) போது சிறுது பிரேக் கட்டையை அழுத்தி விட்டு மீண்டும் வண்டியை ஓட்ட ஆரம்பித்து விடுவான். அடுத்து ஏற்படும் இன்னொரு வேகத்தடையில்; பிரேக் கட்டைக்கு இன்னொரு அழுத்து. இவ்வாறாக தன் பயணத்தை தொடர்ந்து செலுத்தி இனிதே முடித்து விடுவான்.
ஆனால் ஒரு இறைநம்பிக்கையற்றவரோ அல்லது இறைநம்பிக்கையில் பலகீனமானவரோ வண்டியை அங்கே நிறுத்தி விட்டு, அய்யோ இந்த தடையை தாண்ட முடியாதப்பா என்று பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் பிடிப்பார்கள்.

மனித வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள், சவால்களை இந்த பிரேக்கின் இரகசியம் அறிந்தவர்கள் சமாளித்து விடுகிறார்கள். அதற்கேற்றப்போல் வாழ்க்கை எனும் வண்டியை ஓட்டி வெற்றி பெறுகிறார்கள். பூமியில் அல்லாஹ் அமைத்து கொடுத்த வாழ்வை வெற்றியுடன் சமாளித்து சுவனம் எனும் இலட்சியத்தை அடைந்து விடுகிறார்கள்.

இந்த இடத்தில் இன்றையும் கவனிக்க வேண்டும். ஆக வண்டியை ஓட்டுவதில் இவ்வளவு பிரச்சனைகள் உண்டா? என்று நினைத்து வண்டியை ஓட்டாமல் இருக்க முடியாது. அப்படி இருந்தால் இலக்கை ஒருபோதும் அடைய முடியாது. ஏனென்றால் அன்றாடம் இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும் வண்டியை ஓட்டுபவரின் எண்ணிக்கை கூட தான் செய்கிறதே ஒழிய குறையவில்லை என்பதையும் மனத்தில் இருத்தி கொள்ள வேண்டும்.

இதேபோன்று வாழ்க்கையில் எதிர்ப்படும் எந்த துன்பங்கள் ஆனாலும் சீரான வேகத்தில் செல்லும் மனிதர்கள் வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படும் போது சற்று சோர்வு ஏற்பட்டாலும் திரும்ப எழுந்து விடுகிறார்கள். ஆனால் முன்னர் கூறியது போன்று அதிவேகத்தில் செல்லக் கூடிய ஒரு வாகனத்தை எதிர்பாராத விதமாக சந்திக்கும் இத்தகைய தடைகள் மூலமாக முழுமையாக பழுதடைதலை போல வாழ்க்கை எனும் வண்டியில் பயணம் செய்யும் மனிதர்கள் பலர் அதிவேகமாக பயணம் செய்து எதிர்ப்படும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை எடுக்க முடியாமல் தோல்வியை சந்திக்கிறார்கள்.

2 comments:

அபூ முஹை said...

வாங்க சிராஜுதீன், வலைப்பதிவு சார்பாக அன்பான வரவேற்பு.

மேடு பள்ளங்களிலும், வேகத் தடையிலும் வாழ்க்கையெனும் வாகனத்தை நிதானமாகவும், கவனமாகவும் கையாள வேண்டும் என்பதை நன்றாக எழுதியிருக்கிறீகள். இது போல் நிறைய எழுதுங்கள்.

மரைக்காயர் said...

வலைப்பதிவின் மூலம் நல்ல விஷயங்களை சொல்ல வந்திருக்கும் சகோ.சிராஜுதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் சகோதரரே!